​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜப்பானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை

Published : Jul 04, 2019 7:36 PM

ஜப்பானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை

Jul 04, 2019 7:36 PM

ஜப்பானில் கனமழை பெய்து வருவதால், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அந்நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள குய்ஷூ தீவில், எப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 1,000 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், மண்சரிவிலிருந்து மக்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டு அரசு 10 லட்சத்துக்கும் (ஒரு மில்லியன்) அதிகமானோரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளது.

தற்போது மத்திய மற்றும் கிழக்கு ஜப்பான் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருவதால், மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்கவும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையில், நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.