​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சார்ஜிங் நிலையங்களில் உட்கட்டமைப்பு தொழில்நுட்பங்களை அந்ததந்த நிலையங்களின் விருப்பத்திற்கே விட்டுவிட முடிவு

Published : Jul 04, 2019 3:49 PM



சார்ஜிங் நிலையங்களில் உட்கட்டமைப்பு தொழில்நுட்பங்களை அந்ததந்த நிலையங்களின் விருப்பத்திற்கே விட்டுவிட முடிவு

Jul 04, 2019 3:49 PM

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களில் பயன்படுத்தும் உட்கட்டமைப்பு தொழில்நுட்பங்களை, அந்ததந்த நிலையங்களின் தேர்வுக்கே விட்டுவிட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் படி, சார்ஜிங் நிலையங்கள் ஐரோப்பிய தொழில்நுட்பத்திலான ஒருங்கிணைந்த சார்ஜிங் அமைப்பு அல்லது ஜப்பான் தயாரிப்பான சாடெமோ (CHAdeMO) சார்ஜிங் தளங்களை பயன்படுத்துவது கட்டாயமாகிறது.

சர்வதேச அளவில் மின்சார வாகனங்களை அதிவேகமாக சார்ஜ் செய்ய பயன்படுத்தும் இந்த தொழில்நுட்பங்களை நிறுவ, சுமார் 20 முதல் 30 லட்ச ரூபாய் செலவாகும் என கூறப்படுகிறது. மின்சார வாகனங்களை  இன்னும் பெரியளவில் பயன்படுத்தத் துவங்காத நிலையில் இதற்கான முதலீட்டை திரும்ப எடுக்க நீண்ட நாட்களாகும்.

இந்நிலையில் அதிக செலவுகளால் இவற்றை நிறுவ சார்ஜிங் நிலைய உரிமையாளர்கள் தயங்கக் கூடும் என்பதால், இந்த கட்டுப்பாட்டை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான சார்ஜிங் நிலையங்கள் அமைய வாய்ப்பாகும்.