​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மிதக்கும் சூரியசக்தி மின்னழுத்த பூங்கா மின்திட்டம் அமைக்க ஏற்பாடு

Published : Jul 04, 2019 2:55 PM

மிதக்கும் சூரியசக்தி மின்னழுத்த பூங்கா மின்திட்டம் அமைக்க ஏற்பாடு

Jul 04, 2019 2:55 PM

தேனி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் மிதக்கும் சூரியசக்தி மின்னழுத்த பூங்கா மின்திட்டம் குறித்து கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெற்றுள்ளது.

ஆயிரத்து 125 கோடி ரூபாய் மதிப்பீடு கொண்ட இத்திட்டத்தின் கீழ், வைகை, மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளின் நீர் தேக்க பகுதிகள் மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையங்களை சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உடன் சேர்ந்து நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால், சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலம், 250 மெகாவாட் மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையங்களை, பொதுப்பணித்துறையின் நீர் தேக்க பகுதிகளில் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நூறு சதவீத பங்களிப்புடன், ஒப்பந்தப்புள்ளி வாயிலாக விலை நிர்ணயம் செய்து, தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.