​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரேசிலில் அழிக்கப்பட்டு வரும் அமேசான் காடுகள்

Published : Jul 04, 2019 2:54 PM

பிரேசிலில் அழிக்கப்பட்டு வரும் அமேசான் காடுகள்

Jul 04, 2019 2:54 PM

பிரேசில் நாட்டில் காணப்படும் அமேசான் மழைக்காடுகள், விரைவாக அழிக்கப்பட்டு வருகின்றன. அமேசான் மழைக்காடுகளின் மூன்றில் இரு பங்கு காடுகள் பிரேசில் நாட்டில் உள்ளன.

இந்த காடுகள் அண்மை காலமாக தீவைத்து அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின் பிரேசிலில் 4,565 சதுர கிலோ மீட்டர் தூரத்துக்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக கடந்த இரு மாதங்களில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் வனப்பகுதி தீக்கிரையாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலதுசாரி கட்சி அதிபரான ஜேர் போல்ஸ்னரோ(Jair Bolsonaro) ஆட்சியில் தான் வனப்பகுதிகள் அதிகளவு அழிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டி வரும் சுற்றுசூழல் ஆர்வலர்கள், காடுகளை அழிக்கும் கொள்கையை விடுத்து, அமேசான் காடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.