​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேரவை உறுப்பினர்களுக்கு மாதம்தோறும் 2 பனைவெல்லம் வழங்க கோரிக்கை

Published : Jul 04, 2019 2:47 PM



பேரவை உறுப்பினர்களுக்கு மாதம்தோறும் 2 பனைவெல்லம் வழங்க கோரிக்கை

Jul 04, 2019 2:47 PM

சட்டபேரவை உறுப்பினர்களுக்கு மாதம் தோறும் இரண்டு பனைவெல்லம் வழங்குமாறு கிராமத்தொழில் துறை அமைச்சருக்கு துணை சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டபேரவையில் கேள்வி நேரத்தில் இறுதி கேள்விக்கு கதர் மற்றும் கிராமத்தொழில் துறையின் அமைச்சர் பாஸ்கரன் பேசி முடித்த பிறகு பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பனைவெல்லம் உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் மாதம்தோறும் இரண்டு பனைவெல்லத்தை அமைச்சர் வழங்க முன்வருவாரா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பாஸ்கரன், இது தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.