​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

Published : Jul 04, 2019 1:03 PM



வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

Jul 04, 2019 1:03 PM

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக, தமிழகத்தில் வேலூர் தொகுதிக்கு மட்டும் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 11ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வரும் 18ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 19ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 22ஆம் தேதி கடைசி நாள்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று, 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும் ஏற்கெனவே களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாகவும், புதிய வாக்காளர்கள் எக்காரணம் கொண்டும் சேர்க்கப்படமாட்டார்கள் என்றும் மாவட்டம் முழுவதும்  வாகன சோதனை தொடரும்  எனவும் தெரிவித்தார்.