​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சொத்துவரியை குறைப்பது தொடர்பாக, முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

Published : Jul 04, 2019 11:31 AM



சொத்துவரியை குறைப்பது தொடர்பாக, முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

Jul 04, 2019 11:31 AM

சொத்து வரியை குறைப்பது தொடர்பாக, முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

பேரவையில், உறுப்பினர் தங்கபாண்டியன் தண்ணீர் பிரச்சனை மற்றும் சொத்து வரி உயர்வு தொடர்பாக எழுப்பிய  கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்தார்.

தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண, மாவட்டந்தோறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்  கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், சொத்து வரி உயர்வு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், நீதிமன்ற உத்தரவுப்படி சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டதாகவும், இதனை குறைக்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.