​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை கிழக்கு பகுதியில் 449 கிலோ மீட்டர் பாதாள சாக்கடை திட்டம்

Published : Jul 04, 2019 11:25 AM

மதுரை கிழக்கு பகுதியில் 449 கிலோ மீட்டர் பாதாள சாக்கடை திட்டம்

Jul 04, 2019 11:25 AM

மதுரை கிழக்கு பகுதியில் 529 கோடி ரூபாய் மதிப்பில் 449 கிலோ மீட்டர் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மூர்த்தி, மதுரையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டுமென்று கடந்த மூன்று ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருவதாகவும், மதுரை கிழக்கு பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை அமைச்சர்கள் வலியுறுத்தியிருப்பதாக குறிப்பிட்டார்.

529 கோடி ரூபாய் மதிப்பில் 449 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த தனியார் நிறுவனத்திடமிருந்து விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த திட்டம் குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து விரைவில் பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.