​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிபயங்கர விபத்தில் இருந்து மீண்டு வரும் கர்ப்பிணி

Published : Jul 03, 2019 5:51 PM

அதிபயங்கர விபத்தில் இருந்து மீண்டு வரும் கர்ப்பிணி

Jul 03, 2019 5:51 PM

சீனாவில் அதிபயங்கரமான விபத்தில் சிக்கிய கர்ப்பிணியும் அவரது கணவரும் காயமின்றி மீண்டு வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிறன்று காலை 11.22 மணியளவில் சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள வெங்கான் ஜியாங்கவ் என்ற எக்ஸ்பிரஸ் வேயில் மணிக்கு 62 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஒன்று வந்தது.

பாதைகள் பிரியும் இடத்தில் இரவில் ஒளிரும் பூச்சு கொண்ட 2 பேரல்களை வைத்து முன்னெச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காத ஓட்டுநர் நேராகச் சென்று பேரலில் மோதியபோது கார் தூக்கி வீசப்பட்டு தலை கீழாகக் கவிழ்ந்தது.

ஷீட் பெல்ட் அணிந்திருந்ததாலும், தரமான ஏர் பேக்குகளாலும் 4 மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் காயமின்றி வெளியேறினர். கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.