​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரசிகையை சந்தித்து ஆசிப்பெற்ற இந்திய அணி கேப்டன்..!

Published : Jul 03, 2019 3:34 PM



ரசிகையை சந்தித்து ஆசிப்பெற்ற இந்திய அணி கேப்டன்..!

Jul 03, 2019 3:34 PM

இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகமூட்டிய 87 வயதான மூதாட்டியை கேப்டன் கோலியும், ரோகித் சர்மாகவும் சந்தித்தனர்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அணியை மூதாட்டி சாருலதா பட்டேல் உற்சாகமூட்டிய காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

வயது முதிர்ந்த நிலையிலும் இந்திய அணியை வாழ்த்துவற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த அவரை , இந்திய அணியினர் சந்திக்க பிசிசிஐ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

போட்டிக்கு பின்னர், சாருலதாவை கோலியும், ரோகித் சர்மாவும் சந்தித்தனர். இருவருடனும் நீண்ட நேரம் உரையாடிய சாருலதா, வீரர்கள் இருவரையும் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த காட்சிகளை பிசிசிஐ இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோலி, சாருலதாவின் கண்களில் இந்திய அணி மீதான அன்பு மட்டுமே இருந்ததாகவும், அவரின் ஆசியுடன் அடுத்த கட்டத்திற்கு இந்திய செல்வதாகவும் கூறியுள்ளார்.