​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்

Published : Jul 03, 2019 3:20 PM

அரசு பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்

Jul 03, 2019 3:20 PM

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில், அரசு பேருந்து ஓட்டுநரை தனியார் பேருந்து நடத்துனர் தாக்கியதாக கூறி, அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பென்னாடம் பேருந்து நிலையத்தில், அரசு பேருந்து ஓட்டுநரான மணி என்பவர், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையை பின்பற்றாமல் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் பேருந்து நடத்துனரான செல்வராஜ் என்பவர், இது தொடர்பாக மணியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திட்டக்குடி பேருந்து நிலையத்தில் திரண்ட அரசு பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகளை நிறுத்தி தனியார் பேருந்து நடத்துநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால் உரிய நேரத்தில் பயணம் மேற்கொள்ளமுடியாமல் பயணிகள் அவதியுற்றனர். பின்னர் அங்குவந்த காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் கலைந்துசென்றனர்.