​​ சமஸ்கிருதத்தை விட பழமையான, அழகிய மொழி தமிழ் – நரேந்திர மோடி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சமஸ்கிருதத்தை விட பழமையான, அழகிய மொழி தமிழ் – நரேந்திர மோடி

Published : Feb 17, 2018 12:47 AM

சமஸ்கிருதத்தை விட பழமையான, அழகிய மொழி தமிழ் – நரேந்திர மோடி

Feb 17, 2018 12:47 AM

தமிழ் உலகின் பழைமையான மற்றும் அழகான மொழி என்றும், அதைப் பேச முடியாததற்காகத் தான் வருத்தப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேர்வு குறித்து மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லி தல்கதோரா விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதைப் பிரதமர் நரேந்திர மோடியும் மற்ற மாணவர்களும் கண்டுகளித்தனர்.

அரங்கத்தில் இருந்தும் நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வுபற்றிப் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர். தேர்வைச் சிறப்பாக எழுதவும், தேர்வுபற்றிய அச்சத்தைப் போக்கவும் பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை மாணவர்களுக்குக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வணக்கம் எனத் தமிழில் கூறிவிட்டு, அதற்கு மேல் தன்னால் தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். தமிழ் உலகிலேயே பழைமையான மொழி என்றும் அழகான மொழி என்றும் அவர் தெரிவித்தார். தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் என்றும், அது மூலிகைகள் மாத்திரைகளைத் தின்பதால் கிடைத்துவிடாது என்றும், ஒவ்வொரு நாளும் அதைக் கட்டமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பிறருடன் போட்டி போட்டுப் படிக்க வேண்டாம் என மாணவர்களைக் கேட்டுக் கொண்ட மோடி, பிற மாணவர்களுடன் பிள்ளைகளை ஒப்பிட்டு அவர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தத்தை உண்டாக்க வேண்டாம் எனப் பெற்றோரையும் கேட்டுக்கொண்டார்.