​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி-டிரம்ப் சந்திப்பைத் தொடர்ந்து வர்த்தகப் பேச்சுவார்த்தை

Published : Jul 03, 2019 6:29 AM

பிரதமர் மோடி-டிரம்ப் சந்திப்பைத் தொடர்ந்து வர்த்தகப் பேச்சுவார்த்தை

Jul 03, 2019 6:29 AM

இந்தியா-அமெரிக்கா இடையிலான வரி விதிப்பு தொடர்பான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ஜப்பான் சந்திப்பின் போது ஒப்புக் கொண்டதையடுத்து அடுத்த வாரம் இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

அமெரிக்கா அரசின் வர்த்தக பிரதிநிதிகளான மூத்த அதிகாரிகள் கிறிஸ் வில்சன் மற்றும் பிரன்டன் லின்ச் ஆகியோர் இன்னும் சில நாட்களில் டெல்லி வர உள்ளனர். அமெரிக்காவின் 28 பொருட்களுக்கு இந்தியா சுங்க வரியை உயர்த்தியதை குறித்து இவர்கள் பேச்சு நடத்த உள்ளனர்.

ஜி 20 மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்ததையடுத்து இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ரீதியான பனிப்போர் விலகி சுமுகமான நிலை ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பதும் இருநாடுகளின் நட்புறவை மேலும் வலுப்பெற செய்துள்ளது.