​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகள்

Published : Jul 02, 2019 6:53 PM

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகள்

Jul 02, 2019 6:53 PM

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பின் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் அடைகாப்பு மையம் அமைக்கப்படும் என்றும், அதன் மூலம் தொழில் துவங்க முனைபவர்களுக்கு அலுவலக இடம், ஆய்வுக்கூட வசதிகள், அதிவேக இணைய தொடர்பு, காப்புரிமை பெறுதல் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வகங்கள், புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

9 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநில கல்லூரியிலுள்ள மகளிர் விடுதி புதுப்பிக்கப்படும் என்றும், கூடுதலாக விடுதி கட்டிடம் கட்டப்படும் என்பன உள்ளிட்ட 11 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.