​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனது மக்களவை தொகுதிக்கு தனியாக பிரதிநிதியை நியமித்த சன்னி தியோல்

Published : Jul 02, 2019 5:55 PM

தனது மக்களவை தொகுதிக்கு தனியாக பிரதிநிதியை நியமித்த சன்னி தியோல்

Jul 02, 2019 5:55 PM

நடிகரும், பாஜக மக்களவை உறுப்பினருமான சன்னி தியோல், தனது தொகுதி சார்ந்த பணிகளைக் கவனிக்க பிரதிநிதி ஒருவரை நியமனம் செய்துள்ளது தொகுதி மக்களிடையே கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக களமிறங்கிய நடிகர் சன்னி தியோல், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில், தனது தொகுதி சார்ந்த பணிகளைக் கவனிக்க, எழுத்தாளரும் தயாரிப்பாளருமான குர்பிரீத் சிங் பல்கேரி (Gurpreet Singh Palheri) என்பவரை சன்னி தியோல் நியமனம் செய்துள்ளார்.

இது தொடர்பான தகவலை கடிதமாகவும் அவர் வெளியிட்டுள்ளார். மக்கள் தங்களது பிரச்சினைகளை நேரடியாக தெரிவிக்கவே மக்களவை உறுப்பினரை தேர்வு செய்யும் நிலையில், தற்போது தொகுதிக்கு புதிதாக ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.