​​ நன்றாக விளையாடியபோதும் அணியிலிருந்து நீக்கப்பட்டது வருத்தம் : சுரேஷ் ரெய்னா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நன்றாக விளையாடியபோதும் அணியிலிருந்து நீக்கப்பட்டது வருத்தம் : சுரேஷ் ரெய்னா

நன்றாக விளையாடியபோதும் அணியிலிருந்து நீக்கப்பட்டது வருத்தம் : சுரேஷ் ரெய்னா

Feb 17, 2018 12:44 AM

நன்றாக விளையாடிய போதும் அணியிலிருந்து நீக்கப்பட்டது வருத்தமளித்ததாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

நட்சத்திர ஆட்டக்காரரான அவர் கடைசியாக கடந்து ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் பங்கேற்றிருந்தார். அதன் பின்னர் சுரேஷ் ரெய்னா அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் சுரேஷ் ரெய்னா மீண்டும் களமிறங்க உள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், நன்றாக விளையாடியபோதும், அணியில் இடம்பெறாதது வருத்தம் அளித்ததாக கூறியுள்ளார்.

2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டுமென ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.