​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
52 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விரைவில் நிரந்தர முதல்வர்கள் - கே.பி.அன்பழகன்

Published : Jul 02, 2019 3:50 PM

52 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விரைவில் நிரந்தர முதல்வர்கள் - கே.பி.அன்பழகன்

Jul 02, 2019 3:50 PM

தமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளதாகவும், அவற்றிற்கு உடனடியாக நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்களா? என்று சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ் ராஜன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், 10 ஆண்டுகள் மூத்த பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள் தான் முதல்வர்களாகத் தகுதியானவர்கள் என்றும், அப்படிபட்ட தகுதி உடைய பேராசிரியர்களை தேடி வருவதாகவும் கூறினார்.

தற்போது முதல்வர் பதவி காலியாக உள்ள கல்லூரிகளில் மூத்த பேராசிரியர்களைக் கொண்டு தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டு அவர்கள் சிறப்பாக கல்லூரியை நடத்தி வருவதாக தெரிவித்த அன்பழகன், மிக விரைவில் நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.