​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சூறைக்காற்று வீசியதால் சென்னையில் இருந்து சென்ற விமானம் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாத நிலை

Published : Jul 02, 2019 2:58 PM

சூறைக்காற்று வீசியதால் சென்னையில் இருந்து சென்ற விமானம் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாத நிலை

Jul 02, 2019 2:58 PM

தூத்துக்குடி விமான நிலையத்தில் சூறைக்காற்று வீசியதன் காரணமாக, சென்னையில் இருந்து சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டது.

சென்னையில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் பிற்பகல் 12 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அருகே சென்றது. அப்போது வழக்கத்திற்கு மாறாக சூறைக்காற்று வீசயதன் காரணமாக தரையிறங்க முடியாத விமானம் இருமுறை வட்டமிட்டு சுற்றிவந்தது.

அதன் பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு அங்கு தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் அங்கேயே இறக்கி விடப்பட்டனர். அங்கிருந்து வாகனங்கள் மூலம் தூத்துக்குடிக்கு பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.