​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விருதுநகரில் பேருந்து மீது கார் மோதி விபத்து

Published : Jul 02, 2019 7:17 AM



விருதுநகரில் பேருந்து மீது கார் மோதி விபத்து

Jul 02, 2019 7:17 AM

விருதுநகரில் கார்மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் மஞ்சநாயக்கனூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காரில் சென்று கொண்டு இருந்தனர். இன்று அதிகாலையில் விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே கார் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த அரசு சொகுசு பேருந்துமீது மோதியதில், காரில் இருந்த 3பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரை ஓட்டிச் சென்ற அய்யப்பன் என்பவர் பலத்த காயத்துடன் விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து விருதுநகர் ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.