​​ பழனியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு, நிலைதடுமாறிக் கீழே விழுந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பழனியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு, நிலைதடுமாறிக் கீழே விழுந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

பழனியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு, நிலைதடுமாறிக் கீழே விழுந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

Feb 17, 2018 12:43 AM

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், கொள்ளையர்கள் செயின் பறித்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததால் படுகாயமடைந்தார்.

பழனி அருகே வாகரையைச் சேர்ந்த கவிதா, தனது இருசக்கர வாகனத்தில் அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அவரைப் பின் தொடர்ந்த மர்ம நபர்கள் இருவர், கவிதா அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். இதில் நிலை தடுமாறிக் கீழே விழுந்த கவிதா தலை, முகம் ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்தனர். அருகிலிந்தோர் கவிதாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின் கவிதா, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.