​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹாங்காங் அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்

Published : Jul 01, 2019 7:43 PM



ஹாங்காங் அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்

Jul 01, 2019 7:43 PM

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக மீண்டும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

இங்கிலாந்தின் வசம் இருந்த ஹாங்காங் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூலை 1-ஆம் தேதி அன்று சீனாவிடம்  ஒப்படைக்கப்பட்டது.ஆண்டுதோறும் இந்த நாளில் நடைபெறும் பேரணிக்கு, நடப்பு ஆண்டிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஹாங்காங் அரசு நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹாங்காங்கின் தனித்தன்மையை காக்க வலியுறுத்தியும் ஏராளமானவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சட்டப்பேரவை கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் வீசிய அரிப்பு திரவத்தால் 13 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து சட்டமன்ற கட்டிடத்திற்குள் சென்று போலீசார் கதவுகளை மூடிக் கொண்ட நிலையில் கூட்டத்தினர், இரும்பு கம்பிகளால் கதவுகளை உடைத்து உள்ளே புக முயன்றனர்.

இதையடுத்து கூட்டத்தினரை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்ட போலீசார் நகரெங்கும் அதி தீவிர எச்சரிக்கையை அமல்படுத்தி உள்ளனர். போராட்டத்தை கைவிடா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹாங்காங் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹாங்காங் வரலாற்றில் முதல்முறையாக அதி தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி ஹாங்காங் அரசு கொண்டு வந்த , குற்றங்களில் ஈடுபடுவதாக சந்தேகிப்போரை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் மூண்டது. இதே போன்றும் இப்போதும் பெரும் போராட்டம் மூண்டு உள்ளது.