​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று 2 காங்கிரஸ் முதலமைச்சர்கள் ராஜினாமா முடிவு

Published : Jul 01, 2019 6:54 PM



தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று 2 காங்கிரஸ் முதலமைச்சர்கள் ராஜினாமா முடிவு

Jul 01, 2019 6:54 PM

தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரசை சேர்ந்த இரண்டு மாநில முதலமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர்.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பேகல், பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி ஆகியோர் சந்தித்து பேசினர்.

இரண்டு மணி நேர சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று தாமும், கமல்நாத்தும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து கட்சித் தலைமை முடிவு எடுக்கும் என்றும் கூறினார்.

கட்சித் தலைவர் பதவியில் ராகுல் காந்தி தொடர வேண்டுமென வலியுறுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு குறித்து பேசாத மோடி, மத த்தின் பெயரால் மக்களை தவறாக வழி நடத்துவதாக அவர் தெரிவித்தார்.