​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ப்ரைட் பரேட் நிகழ்ச்சியில் நடனமாடிய கமலா ஹாரிஸ்

Published : Jul 01, 2019 5:29 PM



ப்ரைட் பரேட் நிகழ்ச்சியில் நடனமாடிய கமலா ஹாரிஸ்

Jul 01, 2019 5:29 PM

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியிலுள்ள இந்திய வம்சாவளியினரான கமலா கமலா ஹாரிஸ் ஓரினச் சேர்க்கையாளர் பேரணியில் பங்கேற்று நடனமாடினார்.

அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானார்.
மூத்த வக்கீலும், எழுத்தாளருமான கமலா ஹாரிஸ் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த ‘ப்ரைட் பரேட்’ பேரணியில் கமலா ஹாரிஸ் கலந்துக் கொண்டார். மேடையில் பேசிய பின்னர் அவர் உற்சாக நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ள கமலா ஹாரிஸ் நடனமின்றி விழாவைக் கொண்டாட முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘ப்ரைட் பரேட்’ நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதில் பெருமை அடைவதாகவும், தாங்கள் யாரையும் தனியாக போராட விடமாட்டோம்’ எனவும் பதிவிட்டுள்ளார்.