​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்வெட்டிலிருந்து தமிழகத்தை மீட்டதுபோல, குடிநீர் பிரச்சனையை சமாளித்து அதிமுக அரசு வெற்றிகொள்ளும்

Published : Jul 01, 2019 4:34 PM



மின்வெட்டிலிருந்து தமிழகத்தை மீட்டதுபோல, குடிநீர் பிரச்சனையை சமாளித்து அதிமுக அரசு வெற்றிகொள்ளும்

Jul 01, 2019 4:34 PM

மின்வெட்டிலிருந்து தமிழகத்தை மீட்டதுபோல, குடிநீர் பிரச்சனையை சமாளித்து அதிமுக அரசு வெற்றிகொள்ளும் என்றுஉள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சனை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார்.

சென்னை மாநகரை சுற்றியுள்ள 10 ஏரிகள் கண்டறியப்பட்டுமுதல் கட்டமாக இரட்டை ஏரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரிகளில் இருந்து 30 மில்லியன் லிட்டர் நீரை சுத்திகரித்து வழங்க 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கழிவுநீர் மறுசுழற்சி மூலமாக தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு கோயம்பேடு மற்றும் கொடுங்கையூர் பகுதியில் தலா 45 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட 3ஆம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி ஜூலை இறுதியில் முடிவடையும் தறுவாயில் உள்ளது.

இதன் மூலம் வடசென்னை திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக ஆகஸ்ட் 2019 முதல் தினசரி 40 மில்லியன் லிட்டர் நன்னீருக்குப் பதிலாக கழிவுநீர் சுத்திகரித்து வழங்கப்பட உள்ளது.

இவ்விரு நிலையங்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னை மாநகரில் மொத்தமாக உருவாகும் கழிவுநீரில் 20 சதவீதம் அளவிற்கு மறுசுழற்சி செய்யப்படும். இதன் மூலம் நாட்டிலேயே அதிகபட்சமாக கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு திகழும். 

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு 750 மில்லியன் லிட்டர் குடிநீரும், எதிர்ச்சவ்வூடு பரவல் முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் நீரும் மழைப்பொழிவு இல்லாவிடினும்  சென்னை மாநகருக்கு வழங்க இயலும். 

மக்கள் உள்ளாட்சிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரையே பிற பயன்பாட்டிற்கும் பயன்படுத்துவதால் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை அரசியல் ஆக்காமல் ஆக்கபூர்வமான வழிமுறைகளை கூறுமாறும், தண்ணீரில் அரசியல் செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார்.