​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
108 ஆம்புலன்ஸில் பணியிலிருந்த செவிலியருக்கு பாலியல் தொல்லை

Published : Jul 01, 2019 4:18 PM



108 ஆம்புலன்ஸில் பணியிலிருந்த செவிலியருக்கு பாலியல் தொல்லை

Jul 01, 2019 4:18 PM

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே 108 ஆம்புலன்ஸில் பணியில் இருந்த செவிலியருக்கு குடிபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த அதன் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

கீழ நத்தம் தெற்கூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிறுத்தப்பட்டிருந்த 108 வாகனத்தில் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் மாரியப்பனும் விருநகர் பகுதியைச் சேர்ந்த செவிலியர் ஒருவரும் பணியில் இருந்துள்ளனர்.

மதுபோதையில் இருந்த மாரியப்பன், செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. செவிலியர் சப்தமிடவே, அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மாரியப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.