​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காற்று மாசுவுக்கு காரணமாகும் பழைய கார்களிடம் தொடர்ந்து அபராதம் வசூலிக்க கோரிக்கை

Published : Jun 30, 2019 6:11 PM

காற்று மாசுவுக்கு காரணமாகும் பழைய கார்களிடம் தொடர்ந்து அபராதம் வசூலிக்க கோரிக்கை

Jun 30, 2019 6:11 PM

ஸ்பெயினில், காற்று மாசுவுக்கு காரணமாகும் பழைய வாகனங்களிடம் அபராத தொகை வசூலிக்கும் நடவடிக்கை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

ஸ்பெயின் நாட்டில், காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக  ஐக்கிய ஒன்றியத்தின் தூய்மை விதிகளுக்கு எதிராக இருக்கும் பழைய வாகனங்கள், கன்சர்வேட்டிவ் சிட்டி ஹால் பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மீறி செல்லும் பழைய வாகனங்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், வரும் ஜூலை 1ம் தேதி முதல்  பழைய கார்களுக்கு அபராதம் விதிக்கும் உத்தரவு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் காற்று மாசுக்கு காரணமாகும் பழைய கார்களுக்கு அபராதம் விதிக்கும் உத்தரவை தொடரும்படி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் காலோவிலிருந்து (callao) மேட்ரிட் சிட்டி ஹால் நோக்கி பேரணியாக சென்றனர்.