ஜார்ஜியாவில், உள்துறை அமைச்சரை பதவி விலக வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான மக்கள் அமைதி பேரணி நடத்தினர்.
அமெரிக்கா ஆதரவு நாடான ஜார்ஜியாவுக்கு, அண்மையில் வருகை தந்தை ரஷ்ய நாடாளுமன்ற கீழவை உறுப்பினர் ஒருவர், நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் சிலர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றதில் போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதனைத்தொடர்ந்து ஜார்ஜியாவுக்கு செல்லும் ரஷ்ய விமானங்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் தடை விதித்தார்.
இந்நிலையில், கலவரத்துக்கு காரணமான உள்துறை அமைச்சர் கியார்கி கக்கரியா (Giorgi Gakharia) தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், ஜார்ஜியா நாட்டுக்குள் நுழைந்திருக்கும் ரஷ்ய படைகளை அந்நாடு திரும்ப பெற வலியுறுத்தியும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொடி பிடித்தபடி, அமைதி பேரணி நடத்தினர்.