​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கமுதி அருகே பரளையாற்றில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளை

Published : Jun 30, 2019 11:58 AM

கமுதி அருகே பரளையாற்றில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளை

Jun 30, 2019 11:58 AM

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பரளையாற்றில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கமுதி அருகே அபிராமம் பகுதியிலுள்ள பரளையாற்றில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இரவு நேரங்களில் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் பல அடிக்கும் கீழே சென்றுவிட்டதாகவும், அதன் காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து முறையிட்டும் போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறும் பொதுமக்கள், அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே மணல் கொள்ளை நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.