​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செம்மரம் வெட்டும் கும்பலைச் சேர்ந்த ஏழு பேர் கைது

Published : Jun 30, 2019 10:00 AM



செம்மரம் வெட்டும் கும்பலைச் சேர்ந்த ஏழு பேர் கைது

Jun 30, 2019 10:00 AM

ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்ற கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூரை சேர்ந்த ஏழு பேரை காட்பாடி கல்புதூரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு வாகனத்தை சோதனையிட்ட போலீசார் அதில் இருந்தவர்கள் ஆந்திராவுக்கு சென்று வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்துக் கொண்டனர்.

இதையடுத்து கோவிந்தராஜ், பிரகாஷ், ஏகாம்பரம், கோவிந்தராஜ், வெங்கடேசன், நாகராஜ், ராதாகிருஷ்ணன் ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். பின்னர் ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.