​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு முடிவு கட்டப்படும்

Published : Jun 29, 2019 6:39 PM



கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு முடிவு கட்டப்படும்

Jun 29, 2019 6:39 PM

கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு முடிவு கட்டப்படும் என மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் உறுதியளித்துள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ் ஜா, கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் இறப்பது தொடர்கிறது என்றார்.

கழிவுகளை அகற்றும் பணியின்போது உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் தொழிலாளர் இறந்தால் அந்த வேலையை வழங்கியவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற அவர், கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும் என்று தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், ‘‘கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.