​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பணப்பரிமாற்றம், உணவு விநியோக ஆப்களில் விளையாட்டு

Published : Jun 29, 2019 3:02 PM

பணப்பரிமாற்றம், உணவு விநியோக ஆப்களில் விளையாட்டு

Jun 29, 2019 3:02 PM

ஆன்லைன் பணப்பரிமாற்றம், உணவு விநியோகத்துக்கான நிறுவனங்கள் தங்கள் ஆப்-களில் விளையாட்டையும் புகுத்தியது பயனாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இளையோரின் பொழுதுபோக்கில் மொபைல் கேம்ஸ் என்பது பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.

இதை நன்கு உணர்ந்த நிறுவனங்கள் தங்கள் ஆப்களின் பயன்பாட்டை அதிகரிக்கத் திட்டமிட்டன. அதன்படி ஸொமேட்டோ நிறுவனம் கிரிக்கெட் கப் என்ற பெயரிலும் ஸ்விக்கி நிறுவனம் மேட்ச் டே மேனியா என்ற பெயரிலும் தங்களது ஆப்களில் கிரிக்கெட் சார்ந்த வெற்றியைக் கணிப்பது, விளையாடுவது என பல புதுமைகளைப் புகுத்தியது. இதேபோல் பேடிஎம் கேம்ஸ், டெஸ் ஸாட்ஸ் என்றும் பணப்பரிமாற்ற செயலிகளில் விளையாட்டு புகுத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக சில விநாடிகள் மட்டுமே தங்கள் ஆப்-ஐ பயன்படுத்தும் நபர்கள் தற்போது விளையாட்டைப் புகுத்திய பின் அதிக நேரம் பயன்படுத்துவதாக அந்நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. பயனாளர்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் விளையாட்டைப் பயன்படுத்துவதாகவும் அந்நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.