​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜப்பானிலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டார்

Published : Jun 29, 2019 1:24 PM

ஜப்பானிலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டார்

Jun 29, 2019 1:24 PM

ஜி -20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஜப்பானிலிருந்து டெல்லி புறப்பட்டார். 

கடந்த 27ம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். 2 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற அவர், இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.

முன்னதாக ஒசாகா நகரில் இந்தியா வம்சாவழி மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார். மேலும் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். ஜி -20 மாநாடு நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி தனது ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.