​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் பஞ்சு மில்லில் பயங்கர தீவிபத்து

Published : Jun 29, 2019 12:00 PM

தனியார் பஞ்சு மில்லில் பயங்கர தீவிபத்து

Jun 29, 2019 12:00 PM

புதுச்சேரி மடுக்கரையில், தனியார் பஞ்சு மில்லில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

மடுக்கரையில் உள்ள புதுவை காட்டன் மில் என்ற தனியார் பஞ்சு மில்லில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. தீப்பிடித்து எரியத் தொடங்கிய உடனே அங்கிருந்த ஊழியர்கள் தப்பி வெளியே ஓடினர். பஞ்சு, நூல் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததால் சிறிது நேரத்தில் தீ மளமளவென எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.