​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க தயார் - டிரம்ப்

Published : Jun 29, 2019 11:54 AM



வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க தயார் - டிரம்ப்

Jun 29, 2019 11:54 AM

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க தாம் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இருநாட்டுத் தலைவர்களுக்கும் சிங்கப்பூரை அடுத்து இரண்டாவதாக ஹனோயில் சந்தித்துக்கொண்ட போது பேச்சுவார்த்தை தோல்வியுற்று ஒப்பந்தங்களே மேற்கொள்ளாமல் முடிந்தது.

இந்நிலையில் சிங்கப்பூர் சந்திப்புக்கு அடித்தளமிட்டதைப் போன்றே கடந்த வாரம் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஸீ ஜின்பிங் உடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி20 மாநாட்டில் சீன அதிபருடனான பேச்சுவார்த்தைக்குப் பின், வடகொரிய அதிபரை சந்திக்கத் தயார் என டிரம்ப் அறிவித்துள்ளார். ஜி20 மாநாடு முடிந்த கையோடு தென்கொரியா செல்வதாகவும் தென்கொரிய-வடகொரிய எல்லையில் இருதரப்பும் படைகளை அகற்றிய இடத்தில் வைத்து கிம்-மை சந்தித்து கைகுலுக்கி பேசத் தயாராக இருப்பதாக டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.