​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துருக்கி, இந்தோனேசியா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

Published : Jun 29, 2019 11:35 AM



துருக்கி, இந்தோனேசியா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

Jun 29, 2019 11:35 AM

ஜப்பானின் ஒசாகா நகரில், பிரதமர் மோடி இன்றும் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி20 மாநாட்டின் இடையே பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். மாநாட்டின் மூன்றாவது அமர்வுக்கு முன்னதாக, பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் பேசிக் கொண்டனர்.

இதேபோல, டிரம்பின் மகளும், வெள்ளை மாளிகை ஆலோசகருமான இவாங்காவும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடூடுவை Joko Widodo சந்தித்துப் பேசினார். வர்த்தகம், முதலீடு, கடல்சார் ஒத்துழைப்பில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.image

இந்த சந்திப்பு மிகச்சிறப்பாக அமைந்ததாகவும், இந்திய-இந்தோனேசிய உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரு நாட்டு மக்களிடையேயான பிணைப்புகள் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு, வர்த்தக உறவுகளை வலுப்படுத்த ஆவலோடு இருப்பதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ Jair Bolsonaro உடனும் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், இரு நாடுகளும் பல்வேறு வழிகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பை நல்குவதாகவும், பல்வேறு சர்வதேச மன்றங்களில் இணைந்து பணியாற்றுவதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.image

இந்தியா-பிரேசியல் இடையே பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்ததாகவும் ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதேபோல, துருக்கி அதிபர் தையீப் எர்டோகானுடனும் Recep Tayyip Erdogan பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா-துருக்கி இடையேயான உறவுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்புகளுக்கு முன்னதாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சுரேஷ் பிரபுவுடன் ஆலோசனை நடத்தினார்.