​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published : Jun 29, 2019 10:20 AM



சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Jun 29, 2019 10:20 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூலை 7-ந் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி காலையில் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் நடராஜ ரத்தின சபாபதி தீட்சிதர் கொடி ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், முக்கிய நிகழ்வான ஜூலை 7 ஆம் தேதி தேரோட்டத்தில் மூலவரான நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் தனித்தனி தேர்களில் நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர்பவனி வருகிறார்கள்.

ஜூலை 8 ஆம் தேதி அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகமும் மதியம் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.