​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாயமான 2 மாணவிகள் - தேடும் போலீஸ்

Published : Jun 28, 2019 7:11 PM

மாயமான 2 மாணவிகள் - தேடும் போலீஸ்

Jun 28, 2019 7:11 PM

சென்னை தேனாம்பேட்டையில் ஒரு நாளில் 2 மாணவிகள் உட்பட 7 பேர் காணாமல் போனதாக பதிவான புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனாம்பேட்டை யாழ் முதல் தெருவில் உள்ள தனியார் விடுதியில் வேலூரைச் சேர்ந்த சரஸ்வதி, செங்கல்பட்டைச் சேர்ந்த கீதாஞ்சலி இருவரும் தங்கியிருந்தனர். 27ஆம் தேதி மாலை விடுதியில் இருந்து வெளியேறியவர்களை காணவில்லை என்று அவர்களது பெற்றோர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கடந்த 15 நாட்களாக நீட் தேர்வு பயிற்சிக்காக இந்த தனியார் விடுதியில் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது. மாயமான மாணவிகளை, விடுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து, தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தேனாம்பேட்டை வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மனைவி அனுஷா, தனது ஒரு வயது பெண் குழந்தையுடன், காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேனாம்பேட்டை எம்.ஏ கார்டன் பகுதியில் வசித்து வந்த சித்ர பிரியா என்ற பெண் தனது 13 வயது மகள், 11 வயது மகனுடன் காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக அவரது கணவர் சுல்தான் இப்ராஹீம் புகார் அளித்துள்ளார். மூன்று வெவ்வேறு சம்பவங்களில் காணாமல் போனவர்களை தேனாம்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.