​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு

Published : Jun 28, 2019 6:48 PM

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு

Jun 28, 2019 6:48 PM

ஸ்டெர்லைட் கழிவுகள் கொட்டப்பட்டதால் உப்பாறு நதியில் நீர் போக்குவரத்துக்கு தடைபட்டதே தவிர மாசு ஏற்படவில்லை என வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி  வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின், இறுதி வாதம் 2வது நாளாக, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் நடைபெற்றது. வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம்,  தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 3 அனல் மின் நிலையங்கள் உட்பட 67 தொழிற்சாலைகள் உள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு ஆதாரங்கள் இல்லை எனவும், அவ்வாறு மாசு ஏற்படுத்தியிருந்தாலும் ஆலையை மூடுவது தீர்வாகாது எனவும் வாதிட்டார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தவிர ஆலையை மூட வேறெந்த காரணமும் இல்லை எனக் கூறிய அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அறிக்கையில், ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட காற்று, நிலத்தடி நீர் மாசு அனைத்தும் வரம்புக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

அவரது வாதம் நிறைவடையாத நிலையில், வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.