​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கிராம சபை கூட்டம்

Published : Jun 28, 2019 1:29 PM



தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கிராம சபை கூட்டம்

Jun 28, 2019 1:29 PM

கிராம சபை கூட்டங்களில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டார்.

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 72 கிராம சபை கூட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது கிராம மக்களிடம் அந்தந்த பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து கமல்ஹாசன் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கிராமங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டம் போல் நகரத்தில் வார்டுகளில் கூட்டம் நடைபெற வேண்டும் என்பது தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோரிக்கை என்று கூறினார்.