​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளக்காதலனை கொலை செய்த கள்ளக்காதலி...!

Published : Jun 28, 2019 7:59 AM



கள்ளக்காதலனை கொலை செய்த கள்ளக்காதலி...!

Jun 28, 2019 7:59 AM

டலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் கள்ளக்காதலனை கொலை செய்து உடலை இழுத்துச் சென்று வாய்க்கால் புதரில் வீசிய  பெண் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு....

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீரைப் பாளையம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் புவனகிரி காவல் நிலையத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இவரது நடவடிக்கை சரி இல்லாததால் போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும், மேலும் தாமரைச்செல்விக்கு வேறொரு இளைஞருடன் முறையற்ற உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடிக்கடி குடிபோதையில் தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற சீனிவாசனுக்கும், தாமரைச்செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த சீனிவாசன் தாமரைச்செல்வியுடன் தான் நெருக்கமாக இருந்த போது செல்போனில் எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி கீரப்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்கால் புதரில் சீனிவாசன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது சம்பந்தமாக புவனகிரி போலீசார் சந்தேக மரணம் என்ற சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து, சீனிவாசனின் உடலை விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சீனிவாசன் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இதனை அடுத்து தாமரைச்செல்வி மற்றும் அவரது தாயாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 25ஆம் தேதி குடிபோதையில் தனது வீட்டுக்கு வந்த சீனிவாசனிடம் இருவரும் நெருக்கமாக இருந்த- செல்போனில் பதிவு செய்திருந்த போட்டோக்களை கொடுக்கும் படி தாமரைச்செல்வி கேட்டுள்ளார்.

ஆனால் அதனை தர மறுத்ததால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் சீனிவாசனை பிடித்து தாம் தள்ளியதாகவும், இதில் கீழே விழுந்த அவர் தலையில் பலத்த அடிபட்டு இறந்து போனதும் தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாமரைச் செல்வி பக்கத்து வீட்டில் இருந்த தாயார் லட்சுமியை அழைத்து வந்து கீழே விழுந்து கிடந்த சீனிவாசனின் கழுத்தில் கயிற்றை மாற்றி தரதரவென வீட்டின் பின்பக்கமாக இழுத்துச் சென்று பின்பக்க வாய்க்கால் புதரில் போட்டது தெரிய வந்தது.

மேலும் சீனிவாசன் வைத்திருந்த செல்போனை எடுத்து அதனை கல்லால் சுக்குநூறாக உடைத்து அருகில் அருகில் மண்ணைத் தோண்டி புதைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து தாமரைச்செல்வி மற்றும் அவரது தாயாரை கைது செய்த காவல்துறை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.