​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“கேப்மாரி” இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்..! பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு

Published : Jun 27, 2019 8:31 PM



“கேப்மாரி” இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்..! பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு

Jun 27, 2019 8:31 PM

ப்போது உள்ள பெண்கள் ஆண்களிடம் காதலை சொல்ல தயங்குவதில்லை என்றும், ஒரே நேரத்தில் 4 பேரிடம் காதலை சொல்வதாகவும்  நடிகர் விஜய்யின் தந்தையும், கேப்மாரி படத்தின் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தனது மகன் விஜய்யை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர்..!

தான் இயக்கும் படத்திலும் சரி, நிஜத்திலும் சரி எஸ்.ஏ.சந்திரசேகர், சொல்லும் கருத்துக்கள் எப்போதும் பரபரப்பாக பேசப்படும்..! அந்தவகையில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக நடந்த படவிழா ஒன்றில் இனி நாட்டில் எல்லோரும் காவி வேட்டி கட்டிக் கொண்டு அலைய வேண்டியது தான் என்று பேசி பரபரப்பை பற்ற வைத்தார் எஸ்.ஏ. சந்திரசேகர்..!

இந்த நிலையில் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் காவி வேட்டி கட்டி ஸ்டைலாக அமர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

விஜய் கட்டியிருக்கும் காவி வேட்டி குறித்து கேப்மாரி படத்தின் அறிமுக விழாவில் இயக்குனர் எஸ்.ஏ சந்திர சேகரிடம் கருத்து கேட்ட போது, பதில் அளிக்க மறுத்து சற்றே ஆவேசமானார்.

1997 ல் விஜய் கதாநாயகனாக நடித்து 100 நாட்கள் ஓடியதாக விளம்பரப்படுத்தப்பட்ட ஒன்ஸ்மோர் படம், ஒரு தோல்வி படம் என்றும் அதனை படமாக எடுக்க இளையராஜாவின் தூண்டுதல் தான் காரணம் என்றும் 22 வருடங்கள் கழித்து உண்மையை போட்டு உடைத்தார் எஸ்.ஏ. சந்திரசேகர்

இதுவரை 70 படங்களை இயக்கி உள்ளதாகவும் கேப்மாரி தான் தனது கடைசி படம் என்றும் அறிவித்த எஸ்.ஏ. சந்திரசேகர், இப்போது உள்ள பெண்கள் காதலை சொல்ல தயங்குவதில்லை என்றும் ஒரே நேரத்தில் நான்கு பேரிடம் காதலை சொல்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.

எஸ்.ஏ. சந்திரசேகரின், பெண்கள் குறித்த இந்த கருத்து சர்ச்சைகளை கிளப்பி விட்டிருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

காதல் அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்றும் அதனை சமூகத்தில் உள்ள ஒட்டு மொத்தமாக பெண்களின் செயல்பாடாக எடுத்துக் கொண்டு கருத்து சொல்வதால் இது போன்ற வீண் சர்ச்சைகள் எழுவதாக பெண்ணிய சிந்தனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.