​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா குற்றச்சாட்டு

Published : Jun 27, 2019 5:01 PM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா குற்றச்சாட்டு

Jun 27, 2019 5:01 PM

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம், ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக, உயர்நீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் நிலுவையில் உள்ளது. இதே அமர்வில், வியாழக்கிழமையன்று, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜரானார். அப்போது, கடந்தாண்டு ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், அரசியல் நோக்கம் கொண்ட ஒரு சிலர் மற்றும் சில என்.ஜி.ஓ-களால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக வாதிட்டார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது என தெரிவித்த வேதாந்தா நிறுவன தரப்பு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், போராட்டத்தை தூண்டியதும், போராட்டக்காரர்களுக்கு நிதியுதவி வழங்குவதும் சீன நிறுவனம் தான் என்றும், தனது குற்றச்சாட்டை வாதமாக முன்வைத்தார். இவரது வாதம் நிறைவு பெறாததால், விசாரணையை, வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.