​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விகாஸ் சவுத்ரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள்

Published : Jun 27, 2019 5:00 PM

விகாஸ் சவுத்ரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள்

Jun 27, 2019 5:00 PM

அரியானாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி விகாஸ் சவுத்ரி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

அரியானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்களுள் ஒருவராக இருந்தவர் விகாஸ் சவுத்ரி. இவர் இன்று காலை ஃபரிதாபாத்தில் உள்ள உடற்பயிற்சி மையத்துக்கு சென்றுவிட்டு காரில் ஏறிய போது, மற்றொரு காரில் வந்த 2 மர்ம நபர்கள் விகாஸ் சவுத்ரியை துப்பாக்கியால் பலமுறை சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.

இதனையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த விகாஸ் சவுத்ரியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் முன்னரே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.