​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சாதனை

Published : Jun 27, 2019 4:54 PM

சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சாதனை

Jun 27, 2019 4:54 PM

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை அதிவிரைவாக கடந்து விராட் கோலி புதிய சாதனையை படைத்துளளார்.

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் விளையாடும் போட்டி, சர்வதேச அளவில் அவர் விளையாடும் 416ஆவது இன்னிங்ஸ் ஆகும். இந்தப் போட்டியின் போது, 37 ரன்கள் அடித்த விராட் கோலி, ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் 20 ஆயிரம் ரன்கள் குவித்தார். 

416 ஆவது சர்வதேச இன்னிங்சிலேயே இந்தச் சாதனையைப் படைத்த விராட் கோலி, முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரையன் லாரா ஆகியோரை முந்தினார். அவர்கள் இருவரும் 20 ஆயிரம் ரன்கள் குவிக்க, 453 இன்னிங்சுகள் தேவைப்பட்டன. இதுமட்டுமல்லாமல், 20 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற பட்டியலில் 12ஆவது இடத்தை அவர் பிடித்துள்ளார். இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்த இடத்தையும் விராட் கோலி பிடித்துள்ளார்.