​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையோரம் உறங்கி கொண்டிருந்த குழந்தைகள் மீது மோதிய கார்

Published : Jun 27, 2019 12:49 PM

சாலையோரம் உறங்கி கொண்டிருந்த குழந்தைகள் மீது மோதிய கார்

Jun 27, 2019 12:49 PM

பீகாரில், காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தி 3 குழந்தைகளின் உயிர் பறிப்போக காரணமாக இருந்த ஓட்டுநர், பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்தார்.

பீகாரில் உள்ள கும்ரர் (Kumhrar) பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் உறங்கி கொண்டிருந்த குழந்தைகள் மீது மோதியதில் 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ஒரு குழந்தை படுகாயம் அடைந்தது. இதனையடுத்து காரை ஓட்டிய நபரையும் அவருடன் இருந்த நபரையும் அப்பகுதியினர் பிடித்து கடுமையாக தாக்கி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று கும்பலை கலைத்தனர்.

அப்போது பொதுமக்களால் தாக்கப்பட்ட கார் ஓட்டுநர் சவுரவ் கங்குலி (Saurav Ganguli) உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் உடன் வந்த நபரும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.