​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தண்ணீருக்கும் குலுக்குச் சீட்டு

Published : Jun 26, 2019 9:04 PM

தண்ணீருக்கும் குலுக்குச் சீட்டு

Jun 26, 2019 9:04 PM

இராமநாதபுரம் மாவ்ட்டத்தில்  தண்ணீர் பஞ்சத்திற்கு மேலும் ஒரு மோசமான சான்றாக கருங்குளம் கிராமத்தில் மக்கள் குலுக்கல் சீட்டில் பெயர் எழுதிப்போட்டு குடிநீர் பிடிக்கும் நிலை நிலவுகிறது.

300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் கருங்குளம் கிராமத்தில் நீண்ட நாட்களாக மக்களை வாட்டி வதைக்கிறது தண்ணீர் பிரச்சனை. மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் தேவையை காவேரி கூட்டு குடிநீர் திட்டம் பூர்த்தி செய்து வரும் நிலையில் கருங்குளம் கிராமத்துக்கு எட்டவில்லை.

பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் உத்திரகோசமங்கை அருகே பனையூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் மூலமாக குடிநீர் வழங்கப்படுகிறது.

வாரம் இருமுறை மட்டுமே வரும் அந்த தண்ணீரும் ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை வருவதால்
பெண்களுக்குள் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்படுவதால் அதை தவிர்க்க குலுக்கல் சீட்டில் பெயர் எழுதிப்போட்டு தண்ணீர் பிடிக்கின்றனர். அதுவும் வீடொன்றுக்கு 3 முதல் 5 குடம் மட்டுமே கிடைக்கும் என்கின்றனர் மக்கள்.

4 மாதங்களுக்கு முன்னதாக RO பிளாண்ட் அமைத்து தண்ணீர் தர நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகள் இதுவரை அந்தப்பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை என்று மக்கள் வேதனை தெரிவிப்பதுடன் குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது வீணாகி வழிந்தோடும் நீரையும் அள்ளிச்சென்று தெளிய வைத்து பிற தேவைகளுக்கு பயன்படுத்தும் நிலையில் இனியும் தாமதிக்காமல் காவேரி கூட்டுக் குடிநீர் கிடைக்க ஆவண செய்யவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.