​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாவட்ட ஆட்சியருடன் செஸ் விளையாடிய அரசுப்பள்ளி மாணவர்கள்

Published : Jun 26, 2019 1:51 PM

மாவட்ட ஆட்சியருடன் செஸ் விளையாடிய அரசுப்பள்ளி மாணவர்கள்

Jun 26, 2019 1:51 PM

இராமநாதபுரத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவுடன் செஸ் விளையாடி அசத்தினர்.

ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் கிராமத்தில் குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ஆய்வு செய்தார். அப்போது அரசுப்பள்ளி வளாக விளையாட்டு திடலில் கோ- கோ விளையாடிய மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது என்னென்ன விளையாட்டுகள் பயிற்சியளிக்கப்படுகிறது என ஆட்சியர் கேட்டதற்கு, செஸ், கேரம் உள்ளிட்ட விளையாட்டுகள் கற்றுத்தரப்படுவதாக மாணவர்கள் பதிலளித்தனர். இதையடுத்து மாணவர்களுடன் செஸ் விளையாடிய ஆட்சியருக்கு, அரசுப்பள்ளி மாணவன் ஜீவா விளையாட்டில் செக் வைத்தான். ஆனால் அடுத்த நகர்வுகளில் வெற்றி பெற்ற ஆட்சியர், மாணவர்களின் திறமையை வெகுவாக பாராட்டினார்.

மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.