​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விசைப்படகு மீனவர்களின் வலையில் சிக்கி உயிரிழந்த, நாட்டுப்படகு மீனவரின் உடல் மீட்பு

Published : Jun 26, 2019 1:45 PM



விசைப்படகு மீனவர்களின் வலையில் சிக்கி உயிரிழந்த, நாட்டுப்படகு மீனவரின் உடல் மீட்பு

Jun 26, 2019 1:45 PM

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களின் வலையில் சிக்கி உயிரிழந்த, மீனவரின் உடல் 2 நாட்களுக்கு பின்னர் இன்று மீட்கப்பட்டது.

லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த சந்தீஸ்டன் என்ற மீனவர், 2 நாட்களுக்கு முன்பு நாட்டுப்படகில் சங்கு குளிக்க சென்ற நிலையில், விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக இறக்கிய வலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தேடப்பட்டு வந்த மீனவரின் உடல், 2 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டு, கரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மீனவரின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்த தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே விசைப்படகு மீனவர்களை கண்டித்து, நாட்டுப்படகு மீனவர்கள் 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு நிலவுவதால் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.