​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published : Jun 25, 2019 12:51 PM



14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Jun 25, 2019 12:51 PM

தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல்,  கோவை, நாகை, காரைக்கால், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 சென்டிமீட்டர் மழையும், வேலூர் மாவட்டம் கலவையில் 5 சென்டி மீட்டர் மழையும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 சென்டிமீட்டர் மழையும்  பதிவாகி உள்ளது.