​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

Published : Jun 25, 2019 7:57 AM



பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

Jun 25, 2019 7:57 AM

நாகப்பட்டினத்தில், தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த, தலைஞாயிறுவைச் சேர்ந்த பாத்திமா பீவிக்கு நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

அவருக்கு ரத்தம் குறைவாக இருப்பதாக மருத்துவர் ராகிணி கூறிய நிலையில், மற்ற மருத்துவர்களிடம் விசாரித்தபோது பாத்திமா பீவி இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும் பொதுமக்களும் மருத்துவமனை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தகவலின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டனர்.